66

னது திருமண அழைப்பிதழில், ‘பரிசுகளைத் தவிர்க்கவும்’ என்னும் வேண்டுகோளையும் என் தந்தை இடம்பெறச் செய்திருக்கிறார். இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன் மற்றும் பலர் புத்தகங்களை வழங்கினார்கள். திருமணம் நிகழ்ந்தேறிய பின், இரவு பரிசு நூல்களைப் பிரித்துப் பார்த்தபோது அவற்றுக்கு இடையே சிறிய அட்டைப் பெட்டி ஒன்று தெரிந்தது. அதைத் திறந்தபோது அதில் இரண்டு தங்க வளையல்கள் இருந்தன.

உடனே அவற்றை அப்பா அவர்களிடம் கொண்டு போய்க் காண்பித்தேன். அவர் அவற்றை வாங்கிக் கொண்டு, யார் கொடுத்தார் என்பதைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கி விட்டார். அப்போது அப்பா உள்துறை அமைச்சராக இருந்தார். அதனால், காவல்துறை அதிகாரிகள் மூலம் நகை பரிசு தந்தவர் யார் என்பதை அறிந்துகொண்டு வர ஆணையிட்டார். அந்த இரவிலும் வளையலைப் பரிசாகக் கொடுத்தவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்த நாள் காலையிலேயே அவரை எங்கள் வீட்டுக்கு வரச்சொன்னார்.

அப்படி அவர் வந்ததும் அப்பா என்னையும் என் கணவரையும் பரிசு கொடுத்தவரின் கால்களில் விழச் சொன்னார்.

அவரைப் பார்த்து, “மணமக்களை மனமார வாயார வாழ்த்துங்கள்! அதுவே எனக்குப் போதும்!” என்று கூறியபடி தங்க வளையல்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டார் என் தந்தை.

தாம் காவல்துறை அமைச்சராக இருந்த நிலையில் எந்த லஞ்ச லாவண்ணியத்திற்கும் இச்சையே கொள்ளாமல், தமது ஆட்சிப் பதவிக்கு உரிய மரியாதை கொடுத்து, கறைபடாத கரங்களுடன் கடைசிவரை வாழ்ந்து காட்டிய, தூய்மையான தொண்டு விளக்கே என் அப்பா கக்கன்ஜி அவர்கள்!

விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ளாமலேயே மற்றவர்களிடம் நமது கருத்தை நிலை நிறுத்தும் திறமைக்குத்தான் கெட்டிக்காரத்தனம் என்று பெயர்”

டபிள்ஸ்ரீஹென்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book