60

ம்போஸ்ட்’ (கலப்பு வகை) உரத்தைப் பற்றி திரு.கோ.சி.மணி அவர்கள் சொன்னார்கள். குறிப்பாகக் கழிவுப் பொருள்களை எல்லாம் ஒன்றுசேர்த்து வைத்து, அதை உபயோகப்படுத்துவதன் மூலமாக உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றுதான் நாம் திட்டம் போட்டிருக்கிறோம்.

பஞ்சாயத்துக்களை (ஊராட்சி மன்றங்களை) நாம் அமைத்ததே உணவு உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என்பதற்காகத்தான். குறிப்பாக, நமது நாட்டின் பஞ்சாயத்துக்கள் ‘கம்போஸ்ட்’ உரத்தைத் தயார் செய்ய வேண்டும். அதன் மூலமாக உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றுதான் அரசாங்கம் திட்டமிட்டு இதுபோன்று ‘கம்போஸ்ட்’ உரத்தைத் தயார் பண்ணுவதற்கு வழிவகை செய்திருக்கிறது. இதற்காக ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குழிகள் தோண்டி அவற்றில் கழிவுப் பொருள்களைப் போட வேண்டும் என்றும், இதைக் கவனிப்பதற்குக் கிராம சகாயக்குகளையும் (உதவியாளர்களை) நியமித்திருக்கிறோம்.

அது மட்டுமல்ல, பஞ்சாயத்துத் தலைவர்கள், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள், கமிஷனர்கள் (ஆணையர்கள்) இவர்கள் எல்லாரும் இதைப் பற்றிக் கவனித்து வருகிறார்கள். இதைக் கவனிப்பதே இல்லை என்று இலாகா அளவில் தலத்திலேயே ‘அக்ரிகல்ச்சர் எக்ஸ்டென்ஷன் ஆபீசர்’ (வேளாண்மை விரிவாக்க அலுவலர் இருக்கிறார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book