59

திரு. கோ.சி. மணி அவர்கள், அமெரிக்காவில் இருந்து வந்த அன்பர்கள் முதலாளி தொழிலாளி தாரதம்மியம் (தர வேறுபாடு) பற்றிச் சொல்லியிருப்பதாகச் சொன்னார்கள். குத்தகைதாரர்களுக்கு வசதி கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். ‘தொழிலாளர்களின் கஷ்டத்தை நீக்க வேண்டும். தொழிலாளிகள் நிலச்சுவான்தாரர்கள் (நில உரிமையாளர்கள்) இவர்கள் ஐக்கியமாக இருக்க வேண்டும். உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும்‘ என்றுதான் நிலச் சீர்திருத்தச் சட்டம் செய்யத் திட்டமிடப்பட்டது.

திரு. மணி அவர்கள் சொல்வதற்கும் முன்பே நாம் (மாநில அரசு) எடுத்துச் சொல்லியிருக்கிற‘ab£ம். அதன் காரணமாகச் சில திட்டங்கள் எல்லாம் கொண்டுவரப்பட்டன. குத்தகைதாரர்களுக்கு நியாயமான முறையில் அவர்களது உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்க அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது. மேலும் செய்ய ஏதுவாக இருக்கிறது. நிறைவேற்றிய சட்டங்கள் சரிவர அமுல் நடத்தப்படுகின்றன. குறைகள் இருந்தால் ஆர்.டி..விடம் (கோட்டாட்சித் தலைவரிடம்) ‘பெட்டிஷன்’ போட வேண்டும். ஆனால், அப்படி சிலர் போடுவது இல்லை.

நிலச்சுவான்தாரரும் குத்தகைதாரரும் ஒத்துப்போனால் நாம் என்ன செய்ய முடியும்? சில சமயங்களில் அவர்கள் ஒத்துப்போய் விடுகிறார்கள் நிலம் கிடைக்காதே என்று அப்படி இருக்கும் போது, நாங்கள் (மாநில அரசு) ஒன்றும் சொல்வதற்கு இல்லை. குறிப்பிட்ட அதிகாரிகளிடம் சென்று அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். ‘கேப்பிட்டல் அவுட்லே’ யில் (முதலீட்டுத் திட்டத்தில்) ஒதுக்கிய பணம் போதாது என்று திரு. மணி அவர்கள் சொன்னார்கள். அரசின் சார்பில் திட்டம் போடுகிறோம்.

தொகை முன்னதாகவே செலவாகிவிட்டால், இருக்கும் தொகையை வைத்து தொகை ஒதுக்குகிறோம். மேலும் தேவைப்பட்டால் இதர வேலைத் தலைப்புகளில் செலவழிக்காமல் இருந்தால், அதிலிருந்து பெற்றுக்கொள்ள வழி இருக்கிறது. ஒரு திட்டம் போட்டு நிதி ஒதுக்குகிறோம். மேலும் நிதி வேண்டும் என்றால் நிதி இலாகாவைக் கேட்டு மேலும் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் முன்வரும்.

இவ்வாறு அமைச்சர் கக்கன் ஆற்றிய உரையும் அளித்த பதிலும் தமது துறை பற்றி அவருக்கு இருந்த தெளிவான அறிவைப் புலப்படுத்துகின்றன.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book