21

காவல்துறை என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு என்றே கொள்ளலாம். 1957க்குப் பின்னால் படிப்படியாக வளர்ந்து வந்த காவல்துறை 1963க்குப் பின் அதிகப்படியான வளர்ச்சியைக் கண்டது. அதிக எண்ணிக்கையில் காவலர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாகக் காவலர் பயிற்சிப் பள்ளியும் தொடங்கிய பெருமை கக்கனுக்கு உண்டு.

அதுமட்டுமல்லாமல் இன அடிப்படையிலான கலவரங்களைக் கண்டறியவும் உண்மையைத் தெரிந்து கொள்ளவும், தனித்தவொரு இரகசியக் காவலர் படையைத் தொடங்கினார்.

1964 ஆம் ஆண்டு இலஞ்ச ஒழிப்பிற்கென்று தனித் துறையைத் தொடங்கி, மாநிலக் காவல்துறைத்தலைவருக்கு இணையான அதிகாரியை நியமனம் செய்து நாட்டில் நிலவிய தவறுகளைக் களைந்தெறியத் திட்டமிட்டார். அது எந்த அளவிற்குச் செயற்பட்டது? எந்த மட்டத்தில் செயற்பட்டது? என்று பார்ப்பதைவிட அவர் தொடங்கிய நல்லெண்ணத்தை மனதாரப் போற்றிப் பாராட்ட வேண்டும்.

அலுவலக நடைமுறை

காலம் தவறாமல் அலுவலகம் வருவார்; வந்தவுடன் தமக்காகக் காத்திருக்கும் பார்வையாளர்களை அன்போடு அழைத்து அவர்கள் சொல்லும் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் ஆவண செய்வார். எவர் வந்தாலும் அமர வைத்துப் பேசி அனுப்பும் பண்புடையவராகத் திகழ்ந்தார்..

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தியாக சீலர் கக்கன் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book